பவானி - மேட்டூர் சாலையில் சுங்கச்சாவடி கட்டுமானப் பணிகள் மும்முரம்
பவானி - மேட்டூர் - தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், பவானி மேட்டூருக்கு இடையே அம்மாபேட்டையில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடி கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.;
பவானி - மேட்டூர் சாலையில் அம்மாபேட்டை அருகே சுங்கச்சாவடி அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.
பவானி - மேட்டூர் - தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், பவானி மேட்டூருக்கு இடையே அம்மாபேட்டையில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடி கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பவானி - மேட்டூர் - தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டு, சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே, இரு வழிச்சாலையாக இருந்த இந்த சாலையின் இரு புறங்களிலும் தலா 1.5 மீட்டர் விரிவாக்கம் செய்து விட்டு, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்ட போதிலும், இருவழிச்சாலையாகவே உள்ள இந்த சாலையில் இரு இடங்களில் கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடி அமைக்கப்படுகிறது.
இதில், ஒன்றான ஈரோடு மாவட்டத்தில் பவானி - மேட்டூர் வழித்தடத்தில், அம்மாபேட்டை அருகே வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடி அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சுங்கச்சாவடி அமைக்க, அப்பகுதியில் சாலையோரங்களில் உள்ள 104 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், அங்கு சுங்கச்சாவடி அமைப்பதற்கு தேவையான கட்டுமான பணிகள், அலுவலக அறைகள், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.