பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 447 கன அடியாக குறைந்துள்ளது.;

Update: 2023-03-10 03:30 GMT

பவானிசாகர் அணை (பைல் படம்).

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2.47 லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானி சாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால், அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால், அணையின் நீர்மட்டம் தற்போது 94 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. 

இன்று (மார்ச்.10) வெள்ளிக்கிழமை  காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்;-

நீர் மட்டம் - 93.20 அடி ,

நீர் இருப்பு - 23.73 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 447 கன அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 2,700 கன அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2,200 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக 300 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்காக 200 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News