பவானிசாகர் அணையின் இன்றைய (மே.14) நீர்மட்ட நிலவரம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1,012 கன அடியாக உள்ளது.;

Update: 2023-05-14 02:15 GMT

பவானிசாகர் அணை (பைல் படம்).

பவானிசாகர் அணையின் இன்றைய (மே.,14) நீர்மட்ட நிலவரத்தை இந்த பதிவில் காண்போம்.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது 

இன்று (மே.,14) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பவானி ஆற்றில் அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசனப்பகுதிக்கு வினாடிக்கு 900 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.53 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,012 கன அடி தண்ணீர் வந்தது.

அணையில் இருந்து பவானி ஆற்றில் அரக்கன் கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசனப்பகுதிக்கு வினாடிக்கு 900 கன அடி தண்ணீரும், குடிநீருக்காக வினாடிக்கு 150 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீரும் என மொத்தம் 1,055 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News