பவானிசாகர் அணையின் இன்றைய (செப்.20) நீர்மட்ட நிலவரம்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (செப்.20) காலை 8 மணி நிலவரப்படி 74.12 அடியாக உள்ளது.;
பவானிசாகர் அணை (பைல் படம்).
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (செப்.20) காலை 8 மணி நிலவரப்படி 74.12 அடியாக உள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக, பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால், அணைக்கு அவ்வப்போது அணைக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் என மாறி மாறி வந்து கொண்டுள்ளது.
மேலும், கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் 74 அடிக்கும் கீழே சென்று விட்டது.
அதன்படி, இன்று (செப்டம்பர் 20) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-
நீர் மட்டம் - 74.12 அடி ,
நீர் இருப்பு - 12.76 டிஎம்சி ,
நீர் வரத்து வினாடிக்கு - 711 கன அடி ,
நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 2,950 கன அடி ,
கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2,300 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 550 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்காக 100 கன அடி நீரும் என மொத்தம் 2,950 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.