ஈரோடு மாவட்ட அணைகளின் இன்றைய (மே 18) நீர்மட்ட நிலவரம்
ஈரோடு மாவட்ட அணைகளின் இன்றைய (மே 18) நீர்மட்ட நிலவரம் குறித்த தகவல்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று மே.,18 (வியாழக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.28 அடியாகவும், நீர் இருப்பு 17.48 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,062 கன அடி விதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி பாசனத்திற்காக 5 கன அடியும், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1,055 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.
இதேபோல், குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 34.37 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 24.08 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 26.74 அடியாக உள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.