பவானி: குருவரெட்டியூரில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு முகாம்..!

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூரில் புகையிலை எதிர்ப்பு மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-05 11:15 GMT
மாவட்ட நலக்கல்வியாளர் சிவக்குமார் புகையிலை எதிர்ப்பு குறித்து எடுத்துரைத்தார்.

அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூரில் புகையிலை எதிர்ப்பு மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வட்டாரம் குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மக்களுக்கு புகையிலை எதிர்ப்பு மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


இந்த முகாமில் புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீமைகள், உடல் நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் மரண விகிதங்கள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

இம்முகாமில், ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தைச் சேர்ந்த மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் ஐசக் ,செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 75 பேர்கள் கலந்து கொண்டனர்.


அதனைத் தொடர்ந்து, எம்ஜிஆர் நகர் காலனி பகுதியில் நடைபெறும் கொசுப் புழு ஒழிப்பு பணிகளை மாவட்ட நலக்கல்வியாளர் சிவக்குமார் பார்வையிட்டார். மேலும், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் விதம் அதன் பாதிப்புகள், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள் குறித்து சுகாதார நலக் கல்வி வழங்கினார். 

Tags:    

Similar News