கோபி: திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் டீ போட்டு வாக்கு சேகரிப்பு
Erode news- திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாசலம் தனது தொகுதியில் டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;
Erode news- டீ போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாசலம். உடன், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளார்.
Erode news, Erode news today- திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாசலம் தனது தொகுதியில் டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தினமும் வெவ்வேறு விதங்களில் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அருணாசலம் தொகுதி முழுவதும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நம்பியூர் அருகே உள்ள மூணாம் பள்ளி பகுதியில் திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர் அருணாசலத்திற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும், கோபி எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது, வேட்பாளர் அருணாசலம் அந்தப் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்து பெண்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். உடன், அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.