பவானிசாகர் அருகே 18 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மூவர் கைது

Erode News- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கடையை உடைத்து 18 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடித்த வழக்கில் மூவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-07-28 14:45 GMT

Erode News- கைது செய்யப்பட்ட மூவரை படத்தில் காணலாம்.

Erode News, Erode News Today- பவானிசாகர் அருகே கடையை உடைத்து 18 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடித்த வழக்கில் மூவரை போலீசார் கைது செய்தனர். 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையத்தில் இளங்கோ (வயது 53) என்பவர் பட்டு சேலை கடை வைத்து  வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த ஜூலை 3ம் ‌தேதி அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் கடையின் கதவை உடைத்து, கடையில் வைத்திருந்த 18 பவுன் நகை மற்றும் வியாபாரம் செய்ய வைத்திருந்த ரூ.2 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர் .

இதுகுறித்து, பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று (28ம் தேதி) மேட்டுப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் சந்தேகப்படும் படியாக காரில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில், மாதம்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்கிற ஏடிஎம் சரவணன் (வயது 35), கோவை மாவட்டம் கணபதியை சேர்ந்த ஹரிபிரசாத் (வயது 27), புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளியை சேர்ந்த கார்த்தி (வயது 31) ஆகிய மூவரும் பவானிசாகர் கடை கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதில், சரவணன் மீது 50க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும், ஹரிபிரசாத் மீது 5 அடி தடி வழக்குகளும் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் கொள்ளையடித்த 18 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சத்தை மீட்டனர். மேலும், அவர்கள் கொள்ளையடித்ததில் ரூ.50 ஆயிரம் பணத்தை செலவு செய்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோபி சிறையில்  அடைத்தனர்.

Tags:    

Similar News