ஈரோட்டில் ரூ.1.01 லட்சம் மதிப்பிலான இரும்பு பிளேட்டுகளை திருடிய மூவர் கைது
Erode News- ஈரோட்டில் ரூ.1.01 லட்சம் மதிப்பிலான இரும்பு டையிங் கட்டிங் பிளேட்டுகளை திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
Erode News, Erode News Today- ஈரோட்டில் ரூ.1.01 லட்சம் மதிப்பிலான இரும்பு டையிங் கட்டிங் பிளேட்டுகளை திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு அடுத்த பி.பெ.அக்ரஹாரம் நஞ்சப்பாநகரை சேர்ந்தவர் அபிபுல்லா (வயது 51). இவருக்கு சொந்தமான இரும்புக்கடை ஈரோடு - சத்தி சாலையில் தண்ணீர்பந்தல்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ளது. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் (22ம் தேதி) இரவு அபிபுல்லா கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
நேற்று (23ம் தேதி) காலை கடையை திறக்க வந்த போது, கடையை சுற்றி போடப்பட்டிருந்த தகர கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு வைத்திருந்த ரூ.1.01 லட்சம் மதிப்பிலான 13 இரும்பு டையிங் கட்டிங் பிளேட்டுகள் காணாமல் போனது தெரியவந்தது. பின்னர், இதுகுறித்து அபுபில்லை ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் அபிபுல்லா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இரும்பு டையிங் கட்டிங் பிளேட்டுகளை திருடியதாக ஈரோடு கனிராவுத்தர்குளம், சாஸ்திரி நகரை சேர்ந்த முருகன் (வயது 23), சின்னசேமூர், பள்ளிக்கூட வீதியை சேர்ந்த ஹக்கீம் (வயது 23), கனிராவுத்தர்குளம், ஜெ.ஜெ.நகரை சேர்ந்த பூபாலன் (வயது 22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்களிடமிருந்து 13 இரும்பு பிளேட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதில், முருகன் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.