ஈரோட்டில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
Erode news- ஈரோடு மாநகர் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது.;
Erode news- நேதாஜி மார்க்கெட்டில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட கரும்புகளை காரில் ஒருவர் வாங்கிச் செல்லும் காட்சி. உள்படம்:- காய்கறிகள் வாங்க குவிந்த மக்கள்.
Erode news, Erode news today- ஈரோடு மாநகர் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை நாளை (15ம் தேதி) திங்கட்கிழமை உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) போகி பண்டிகை ஆகும். பழையன கழிந்து, புதியன புகும் நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் புதியவற்றை வரவேற்கும் வகையில், வீட்டின் கூரையில் வேப்பிலை, ஆவாரம்பூ, பூலப்பூ ஆகியவற்றை சேர்த்து காப்பு கட்டுவது வழக்கம்.
இதனையொட்டி ஈரோடு மாநகரில் உள்ள பன்னீர் செல்வம் பூங்கா, பெரியமாரியம்மன் கோவில், காளைமாட்டு சிலை, மணிக்கூண்டு, ஸ்வஸ்திக் கார்னர், சம்பத்நகர், வீரப்பன்சத்திரம், உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதியில் கிராமப்புறங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட வேப்பிலை, ஆவாரம்பூ, பூளைப்பூ ஆகியவற்றை காப்பு கட்ட ஏற்றவாறு சிறு சிறு கட்டுக்களாக கட்டி வியாபாரிகள் சாலையோரம் விற்பனை செய்து வருகின்றனர்.
இதேபோல், சங்கராந்தி பொங்கலுக்குப் பயன்படுத்தும் மொச்சை, அவரை, அரசாணிக் காய் போன்றவை வ.உ.சி. பூங்கா அருகே தற்காலிகமாக செயல்படும் நேதாஜி தினசரி மார்க்கெட்டில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், பொங்கலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் குலை மற்றும் கரும்பு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.