கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-05-11 14:55 GMT
கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி  தஞ்சம்

கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்.

  • whatsapp icon

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம்  அருகே உள்ள ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாசம் மகன் பிரபு.பி.பார்ம். முடித்துள்ள பிரபு திருப்பூரில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார்.

பிரபு படித்த கல்லூரியில் திருப்பூர் காந்திநகரை சேர்ந்த அசோகன் மகள் விஷ்ணுபிரியா என்பவரும் படித்து வந்துள்ளார். ஒரே கல்லூரியில் படித்ததால் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதைத்தொடர்ந்து நேற்று காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஈரோட்டில் உள்ள கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து இருவரும் பாதுகாப்பு கேட்டு இன்று கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அனைத்து மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் திருமதி.மேனகா,இருவரின் பெற்றோரையும் அழைத்து பேசினார். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் விஷ்ணு பிரியாவின் பெற்றோர் காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில் பிரபு வீட்டார் இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து காதல் தம்பதியர் பிரபுவின் வீட்டிற்கு சென்றனர்.

Tags:    

Similar News