புகார் தெரிவிக்க செல்போன் எண் வெளியிட்டார் ஈரோடு மாவட்ட புதிய ஆட்சியர்
ஈரோடு மாவட்ட ஆட்சியராக ராஜ கோபால் சுன்கரா இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.;
ஈரோடு மாவட்ட ஆட்சியராக ராஜ கோபால் சுன்கரா பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியராக ராஜ கோபால் சுன்கரா இன்று (மே.,22) திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொதுமக்கள் புகார் தெரிவிக்க தனது செல்போன் எண்ணை வெளியிட்டு உள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த ஹெச்.கிருஷ்ணனுண்ணி நிதித்துறை இணை செயலாளராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த ராஜ கோபால் சுன்கரா ஈரோடு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியராக ராஜ கோபால் சுன்கரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்ற வாய்ப்பளித்த முதலமைச்சருக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தந்தை பெரியார் பிறந்த மண்ணில் ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. பொதுமக்கள் குறைகளை தீர்க்கவும், அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் முழுமையாக முயற்சி செய்வேன்.
தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுவேன். இம்மாவட்டத்தின் முக்கிய தொழில்களான விவசாயம், நெசவு, தொழிற்சாலை வளர்ச்சிக்காக முழு அளவில் பாடுபடுவேன். பொது மக்கள் தங்களது குறைகளை எண் நேரமும் தெரிவிக்கலாம். இதற்காக 0424-2260211 என்ற தொலைபேசி எண்ணும், 97917 88852 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியரே தனது செல்போன் எண்ணை செய்தியாளர்களிடம் தெரிவித்து இருப்பது மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.