ஊத்துக்குளி அருகே ரூ.20 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ
பெருந்துறை சட்டமன்ற தொகுதி ஊத்துக்குளி ஒன்றியத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பணிகளை ஜெயக்குமார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.;
பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்குளி ஒன்றியம் நவக்காடு ஊராட்சியில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
இதேபோல் வேலம்பாளையம் ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டது. மேற்கண்ட பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு, நவக்காடு ஊராட்சி மன்ற தலைவர் குட்டி, வேலம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் கண்ணம்மாள் ராமசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊத்துக்குளி வடக்கு ஒன்றிய செயலாளர் தனசேகர், பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே.செல்வராஜ், மாவட்ட பொருளாளர் கே.பி.எஸ். மணி, ஒன்றிய துணைச் செயலாளர் அருண்குமார், நகரத் துணைச் செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதி மாணிக்கம், தகவல் தொழில்நுட்ப பிரிவு செங்கப்பள்ளி ராசப்பன், செங்கப்பள்ளி துரைசாமி, பாசறை மாவட்ட இணை செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் பொதுமக்களும் உடன் இருந்தனர்.