ஈரோடு: கள்ளிப்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.
நெல் அறுவடை நடந்து வரும் நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம் சார்பில் ஈரோடு டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டியில் இவ்வாண்டு பருவத்திற்கான நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் நேற்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியின் போது டி.என்.பாளையம் ஒன்றிய தி மு க. செயலாளர் எம்.சிவபாலன், கோபி தாசில்தார் ஆசியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம் ஈரோடு மண்டல மேலாளர் வி.சி.முருகேசன், துணை மேலாளர் தரக்கட்டுப்பாடு பி.மனோகரன், டி.என்.பாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன், கள்ளிப்பட்டி நெல்கொள்முதல் அலுவலர் டி.மோகனசுந்தரம், கொண்டையம்பாளையம் ஊராட்சி தலைவர் மரகதம் பாலு, அரக்கன் கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பகவதியண்ணன், செயலாளர் முருகேஷ் சஞ்சிவ், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.