அந்தியூரில் 2 புதிய பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 2 புதிய பேருந்துகளின் இயக்கத்தை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2024-10-10 12:30 GMT

அந்தியூரில் 2 புதிய பேருந்துகளின் இயக்கத்தை எம்எல்ஏ வெங்கடாசலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அந்தியூரில் 2 புதிய பேருந்துகளின் இயக்கத்தை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து ஈரோடு,  திருச்சி, புதுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு ஏற்கனவே வழித்தடத்தில் இயங்கி வரும் பேருந்துகளுக்கு மாற்றாக இரண்டு புதிய பேருந்துகளை இயக்கத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி அந்தியூர் பேருந்து நிலையத்தில் இன்று (10ம் தேதி) நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டல பொது மேலாளர் மோகன்குமார் தலைமை வகித்தார். ஈரோடு மண்டல துணை மேலாளர் ஜெகதீஸ்வரன், அந்தியூர் கிளை மேலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்நிகழ்ச்சியில், அந்தியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு 2 பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து, அந்தியூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், அந்தியூர் பேரூராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் பழனிசாமி, திமுக பொதுக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மையின அணி தலைவர் செபஸ்தியான், அமைப்புச் சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் நாகராஜ், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணன் (மைக்கேல்பாளையம்), குருசாமி (சங்கரா பாளையம்), மாறன் (கெட்டி சமுத்திரம்), முன்னாள் ஊராட்சி திமுக செயலாளர்கள் தர்மலிங்கம், ராமகிருஷ்ணன், பிரம்மதேசம் ஊராட்சி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News