சென்னிமலையில் ரூ.30.50 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்த அமைச்சர்
சென்னிமலை ஊராட்சி ஒன்றியப் பகுதியில் ரூ.30.50 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பணியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னிமலை ஊராட்சி ஒன்றியப் பகுதியில் ரூ.30.50 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பணியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சியில் ரூ.12.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடையினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து, ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினையும், ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணியினையும் துவக்கி வைத்தார்.
முன்னதாக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதுப்பாளையம் ஊராட்சியில் ரூ.11.70 லட்சம் மானியத்தில் 9 விவசாய பயனாளிகளை குழுவாக அமைத்து 6.38 எக்டர் பரப்பளவில் ஆழ்குழாய் கிணறு அமைத்தல், மின்மோட்டார் நிறுவுதல், மின் இணைப்பு வழங்குதல், சொட்டுநீர் பாசனம் அமைத்தல் போன்ற பணிகளுடன் மல்லிகா, மல்கோவா, பங்கனபள்ளி, செந்தூரா, இமாம்பசந்து உள்ளிட்ட மாசெடிகள் விநியோகம் செய்திடும் பொருட்டு, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சென்னிமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் காயத்ரி இளங்கோ, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர்பாபு, பாலமுருகன் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.