அரசின் நில வழிகாட்டி மதிப்பு உயர்வை தடுக்கக் கோரி எம்எல்ஏக்களுக்கு நில முகவர்கள் கடிதம்

அரசின் நில வழிகாட்டி மதிப்பு 70 சதவீத உயர்வை தடுக்கக் கோரி ஈரோடு மாவட்ட நில முகவர்கள் மற்றும் தரகர்கள் நலச் சங்கத்தினர் 234 எம்எல்ஏக்களுக்கு கடிதம் அனுப்பினர்.

Update: 2024-05-29 11:00 GMT

எம்எல்ஏக்களுக்கு கடிதம் அனுப்ப ஈரோடு தலைமை தபால் அலுவலகத்திற்கு வந்த ஈரோடு மாவட்ட நில முகவர்கள் மற்றும் தரகர்கள் நலச் சங்க நிர்வாகிகள்.

அரசின் நில வழிகாட்டி மதிப்பு 70 சதவீத உயர்வை தடுக்கக் கோரி ஈரோடு மாவட்ட நில முகவர்கள் மற்றும் தரகர்கள் நலச் சங்கத்தினர் 234 எம்எல்ஏக்களுக்கு கடிதம் அனுப்பினர்.

தமிழ்நாடு அரசின் நில வழிகாட்டி மதிப்பு 70 சதவீத உயர்வை தடுக்கக் கோரி 234 எம்எல்ஏக்களுக்கு கடிதம் அனுப்ப ஈரோடு மாவட்ட நில முகவர்கள் மற்றும் தரகர்கள் நல சங்க தலைவர் செல்வமணி, செயலாளர் ராஜு, பொருளாளர் வைரமணி, சட்ட ஆலோசர்கள் தங்க வேலு, வீரக்குமார் மற்றும் நிர்வாகிகள் ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் வந்தனர். பின்னர், அவர்கள் எம்எல்ஏக்களுக்கு கடிதம் அனுப்பினர். 

இதுகுறித்து ஈரோடு மாவட்ட நில முகவர்கள் மற்றும் தரகர்கள் நலச் சங்கத் தலைவர் செல்வமணி கூறுகையில், தமிழக அரசு தற்போது நில வழிகாட்டி மதிப்பு 70 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் தமிழக அரசு கொண்டு வரும் 70 சதவீதம் அரசு வழிகாட்டி மதிப்பின் உயர்வால் 10 வருடங்களுக்கு தொழில் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும்.

மேலும், கட்டுமானத் துறை ரியல் எஸ்டேட் வரை அனைத்து துறை பொதுமக்களும் பாதிப்பு இல்லாமல் இருக்க தமிழக அரசு கொண்டுவரும் நடைமுறையை 5 சதவீதம் 10 சதவீதம் மற்றும் உயர்த்தி பொதுமக்களை காப்பாற்றுமாறும் சாதாரண பொதுமக்கள் இடம் வாங்குவதே கனவாக மாறும் சூழ்நிலையை தவிர்க்கவும் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசு வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்படுவதால் கட்டிட தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள்,   வீடு கட்டி விற்பவர்கள், பத்திர விற்பனையாளர்கள், சுமை தூக்கும் வாகன ஓட்டிகள் உட்பட ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே அரசு வழிகாட்டி மதிப்பு 70 சதவீதம் உயர்த்தப்படுவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். 

இது தொடர்பாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News