சத்தியில் மக்களுடன் முதல்வர் குறைதீர் முகாமினை துவக்கி வைத்த ஆட்சியர்
Erode News- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாமினை துவக்கி வைத்து, பொதுமக்கள் கணினியில் மனுக்கள் பதிவு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டார்.
Erode News, Erode News Today- சத்தியமங்கலம் அரசூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாமினை துவக்கி வைத்து, பொதுமக்கள் கணினியில் மனுக்கள் பதிவு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அரசூர் ஊராட்சி, காமாட்சி அம்மன் கோவில் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற குறைதீர் முகாமினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (24ம் தேதி) துவக்கி வைத்தார்.
பின்னர், பொதுமக்கள் அவர்களுடைய கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இண்டியம்பாளையம், அரசூர், மாக்கினாம்கோம்பை, சதுமுகை ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இம்முகாமில் பல்வேறு துறைகள் சார்ந்த அலுவலர்கள் கலந்து கண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு பதிவு செய்தனர்.
இதில், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கே.சி.பி.இளங்கோ, வடிப்பக அலுவலர் (சத்தி சுகர்ஸ்) சொரூபராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்தியமங்கலம்) அப்துல்வகாப், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.