பவானி சங்கமேஸ்வரர் கோவில் தேரோட்ட விழா சிறப்பு தொகுப்பு
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம், இன்று கோலாகலமாக நடந்தது.;
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்த போது எடுத்த படம்
ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நேற்று ஆதிகேசவ பெருமாள் திருக்கல்யாணத்தை தொடர்ந்து, ஆதிகேசவ பெருமாள்தேரோட்டம் நடந்தது.தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணியளவில், வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வர சுவாமிக்கு, திருக்கல்யாணம் நடந்தது.
இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். காலை, 8:30 மணியளவில் தேரோட்டம் நடந்தது. சிவனடியார்கள், பக்தர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தேரை வடம் பிடித்து, முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். வரும், 19ஆம் தேதி காலை நடராஜருக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலை, 4 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் சித்திரை விழா நிறைவடைகிறது.
பவானி சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்ட சிறப்பு புகைப்பட தொகுப்பு:-