தாளவாடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் | Erode news today
Erode news today - ஈரோடு மாவட்டம் தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தாளவாடி வட்டார வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.;
தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தாளவாடி வட்டார வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது | Erode news today
ஈரோடு மாவட்டம் தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தாளவாடி வட்டார வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சு.முத்துசாமி தலைமையில் நேற்று (நவ.21) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தாளவாடி வட்டாரத்தில் அனைத்து துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து, தொடர்புடைய துறை உயர் அலுவலர்களுடன் அமைச்சர் முத்துசாமி விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, தாளவாடி பாரதிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 500மெ.டன் குளிர்பாதன கிடங்கு, 1000 மெ.டன் தேசிய மின்னணு பரிவர்த்தனை கிடங்கு மற்றும் விவசாயிகளின் விளைபொருளான தேங்காய் பருப்பு ஏலமிடப்பட்டு வந்ததை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தாளவாடி பகுதியில் அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் 300 வாடகை குடியிருப்புகள் கட்டுவதற்கான இடம் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஸ், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், சத்தியமங்கலம் நகர்மன்ற தலைவர் ஜானகி, வேளாண்மை துணை இயக்குநர் சாவித்திரி, வேளாண்மை அலுவலர் கனிமொழி மற்றும் மேற்பார்வையாளர் ரங்கநாதன் உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்