அந்தியூர் அருகே எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் தற்காலிக பணி நீக்கம்

அந்தியூர் அருகே லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-09-14 10:00 GMT

அந்தியூர் அருகே  எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார்  தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் சதீஷ்குமார் (வயது35). இவர் கடந்த 10-ம் தேதி பட்டா மாறுதலுக்காக லஞ்சம் பெற்றதாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கோபி கோட்டாட்சியர் திவ்ய பிரதர்ஷினி உத்தரவின் பேரில் எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News