ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் மூடல்.! எத்தனை நாளைக்கு தெரியுமா.?

ஈரோடு மாவட்டத்தில் இம்மாதம் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-01-13 03:30 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இம்மாதம் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சுதந்திர தினம், குடியரசு தினம், திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தினங்களில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.  இந்நிலையில், திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு நினைத்ததை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் வரும் 16-ம் தேதி மற்றும் 26-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ஈரோடு மாவட்டத்தில் வருகிற 16-ம் தேதி திருவள்ளுவர் தின மும், வருகிற 26-ம் தேதி குடியரசு தினமும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அன்றைய தினங்களில் மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதன் காரணமாக வருகிற 16-ம் தேதி மற்றும் 26-ம் தேதி ஆகிய 2 நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகள், அதனுடன் இயங்கும் பார்கள், கிளப்புகள், ஓட்டலில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் மது விற்பனைகள் எதுவும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News