பவானியில் தமிழக டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்க செயற்குழுக் கூட்டம்

தமிழக டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம் பவானியில் இன்று நடைபெற்றது.

Update: 2023-01-27 14:15 GMT

தமிழக டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள்.

தமிழக டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம் பவானியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சுதாகர் வரவேற்றார். மாநில துணைச் செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி தொழிற்சங்க பேரவை துணை பொதுச் செயலாளர் ராமசுந்தரம், மாநிலச் செயலாளர் முருகையன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பின்னர், நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

19 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பாரபட்சமின்றி அனைத்து பணியாளர்களுக்கும் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். தொழிலாளர்களின் உரிமைக்காக போராடிய கோவை கூட்டுக்குழு நிர்வாகிகளின் பணியிட மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர் விரோதப் போக்கை கைவிடவேண்டும். வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் மலைப் பகுதியில் உள்ள (கடம்பூர், ஆசனூர், தாளவாடி) மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதில், ஈரோடு வடக்கு மாவட்ட வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் திருமுருகன், சங்கத்தின் மாவட்டத் தலைவர் கதிர்வேல், நிர்வாகிகள் சரவணன், சம்பத், ஜீவா, சிவாஜி, ஜெயவேல், தினேஷ்குமார், சேகர், சுப்பிரமணியம், ராஜேந்திரன், ரங்கநாதன், குமார், சரவணன், தனசேகர், குமாரவடிவேல், மாதையன், செந்தில்குமார், ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News