கடம்பூர் குத்தியாலத்தூர் மலைக்கிராமத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் குத்தியாலத்தூர் மலைக்கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (24ம் தேதி) ஆய்வு மேற்கொண்டார்.;
சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் குத்தியாலத்தூர் மலைக்கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (24ம் தேதி) ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதி குத்தியாலத்தூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, குத்தியாலத்தூர் ஊராட்சி மல்லியம்மன் துர்க்கம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.
தொடர்ந்து, கல்கடம்பூர் முதல் மல்லியம்மன்துர்க்கம் வரை 9 கி.மீ தூரத்திற்கு மலைப்பகுதிக்கு சாலை பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும், மின்சாரம் வசதி ஏற்படுத்துவது குறித்த சாத்தியக் கூறுகள் தொடர்பாக நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத். தொடர்ந்து, குத்தியாலத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவு, மதிய உணவு குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் மாணவர்களின் வருகை பதிவேட்டினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்வது தொடர்பாக, கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், அதே பகுதியில் சமுதாய கிணறு அமைக்கப்பட்டு உள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, குத்தியாலத்தூர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் குரும்பபள்ளம் மற்றும் சக்கரைப்பள்ளம் பாலங்களின் கட்டுமானப் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்வகாப் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.