வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த 69 பேர் கண்காணிப்பு

ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 1-ம் தேதி முதல் நேற்று வரை வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த 69 பேர் தீவிர கண்காணிப்பு.;

Update: 2021-12-06 11:30 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த டிச.1-ம் தேதி முதல் நேற்று வரை பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 69 பேர் வந்துள்ளனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை முடிந்து நெகட்டிவ் என்ற முடிவுடன் அவரவர் வீட்டுக்கு வந்துள்ளனர். எனினும் அவர்கள் ஒரு வாரத்திற்கு வீட்டை விட்டு வெளியே வராமல் வேண்டும். இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுடன் தொடர்பு இருப்பவர்களும் ஒரு வாரத்திற்கு வெளியே வரவேண்டாம் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் தினமும் சுகாதாரத்துறை சார்பில் செவிலியர்கள் மற்றும் சுகாதார குழுவினர் சென்று கண்காணித்து வருகின்றனர். 

Tags:    

Similar News