ஈரோட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை திறந்த வைத்த போலீஸ் சூப்பிரண்டு

ஈரோடு திண்டலில் ஈரோடு ரைபிள்ஸ் என்ற பெயரில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் திறந்து வைத்தார்.

Update: 2024-05-09 10:54 GMT

துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை திறந்து வைத்து, துப்பாக்கியால் குறி தவறாமல் சுட்டும் பயிற்சியை துவங்கி வைத்த ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்.

ஈரோடு திண்டலில் ஈரோடு ரைபிள்ஸ் என்ற பெயரில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் திறந்து வைத்தார்.

ஈரோடு திண்டல் தெற்குப்பள்ளம் சாலையில் உள்ள கீழ் திண்டல் பகுதியில் ஈரோடு ரைபிள்ஸ் மற்றும் ஈரோடு ரைபிள் அகாடமி'சார்பில் ஈரோடு ரைபிள்ஸ் என்ற பெயரில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு அகாடமி தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். 


கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.ஹேமலதா கேரளா நீலாம்பூர் வனச்சரக அதிகாரி பி.கார்த்திக், வேளாளர் பொறியியல் கல்லூரி முதல்வர் எம்.ஜெயராமன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். விழாவில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜி.ஜவகர் கலந்து கொண்டு துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை திறந்து வைத்து, துப்பாக்கியால் குறி தவறாமல் சுட்டும் பயிற்சியையும் தொடங்கி வைத்தார்.

விழாவில் கொங்குநாடு கலைக்குழு நிறுவனர் கே.கே.சி.பாலு, தாலுகா இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், பயிற்சியாளர் எம்.முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அகாடமி செயலாளர் எஸ்.தியாகு வரவேற்றார். முடிவில் பொருளாளர் டி.சரவணன் நன்றி கூறினார். இங்கு தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது. குளிர்சாதன வசதி, கண்காணிப்பு கேமரா வசதியும் உள்ளது.

Tags:    

Similar News