காளிங்கராயன் அணைக்கட்டு அருகே அடையாளம் தெரியாதவர் தற்கொலை
பவானி அருகே உள்ள காளிங்கராயன் அணைக்கட்டு முன்பு உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் அடையாளம் தெரியாத நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில், நேற்று இரவு நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், அப்போது அடையாளம் நபர் ஒருவர் அணைக்கட்டு முன்பு இருந்த குடிநீர் மேல்நிலை தொட்டி செல்லும் இரும்பு படியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்த அப்பகுதியினர், சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார் என்று தெரியாததால் அவரது சட்டை பையில் இருந்த பேருந்து டிக்கெட் வைத்து போலீசார் எந்த பகுதியை சேர்ந்தவர் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து வருகின்றனர்.