பிரம்மதேசம் பகுதி ரேஷன் கடையில் தரமற்ற கோதுமை: பொதுமக்கள் புகார்
அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையில் தரமற்ற கோதுமை வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில் 01ஆம் எண் கொண்ட நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையின் மூலம் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கோதுமையில் பெரும்பாலும் சிறு கற்கள் இருப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து, கடையின் அலுவலரிடம் முறையிட்ட போது கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால், பொதுமக்கள் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தரமான பொருட்கள் வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.