பேருந்து நிலைய கழிப்பிடத்தை சுத்தம் செய்ய மனு குடுங்க..! எம்எல்ஏவிடம் சுகாதார ஆய்வாளர் பகீர்..!

ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி நகராட்சி பேருந்து நிலைய இலவச கழிப்பிடத்தை சுத்தம் செய்ய எம்எல்ஏவிடம் சுகாதார ஆய்வாளர் தட்சணாமூர்த்தி மனு கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-09-19 03:30 GMT

சுகாதார ஆய்வாளர் தட்சணாமூர்த்தியிடம் கேள்வி எழுப்பிய பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி.

புன்செய்புளியம்பட்டி நகராட்சி பேருந்து நிலைய இலவச கழிப்பிடத்தை சுத்தம் செய்ய எம்எல்ஏவிடம் சுகாதார ஆய்வாளர் தட்சணாமூர்த்தி மனு கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி நகராட்சி பேருந்து நிலையத்தில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது, பேருந்து நிலைய இலவச கழிப்பிடம் துர்நாற்றம் வீசியது. இதனை, சுத்தமாக வைத்துக் கொள்ள நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதற்கு, சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, கோரிக்கை எதுவாக இருந்தாலும் மனுவாக எழுதிக் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்‌ என மிரட்டியுள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி ஒவ்வொன்றையும் கோரிக்கையாக எழுதி கொடுத்தால்தான் வேலை செய்வீர்களா என சரமாரியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி கூறியதாவது, நகராட்சி நிர்வாகம் நகராட்சியாக செயல்படவில்லை. சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது. இதற்கு, மாவட்ட ஆட்சியர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளேன். மனுவாக எழுதி கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என்று எம்எல்ஏவான என்னயே மிரட்டுகிறார்கள். இங்கு, அதிகாரிகள் யாரும் வேலை செய்வதில்லை.

எனவே, உடனடியாக, ஆட்சியர் இதுகுறித்து விசாரித்து நகராட்சி ஆணையாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில், அதிமுக சார்பில் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News