பெருந்துறை அருகே இன்ஸ்டாகிராம் காதலால் மாணவி கர்ப்பம்: காதலன் தலைமறைவு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே இன்ஸ்டாகிராம் காதலால் 3 மாத கர்ப்பமான கல்லூரி மாணவிக்கு, திருமணத்துக்கு நாள் குறித்த நிலையில், அவருடைய காதலன் தலைமறைவானார்.;
பெருந்துறை அருகே இன்ஸ்டாகிராம் காதலால் 3 மாத கர்ப்பமான கல்லூரி மாணவிக்கு, திருமணத்துக்கு நாள் குறித்த நிலையில், அவருடைய காதலன் தலைமறைவானார்.
ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் 21 வயதான மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் பாட்டு பாடியும், நடனமாடியும், சினிமா வசனங்களை பேசியும் மீம்ஸ்களை போட்டு வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த முகமது ஹர்சத் (வயது 25) லைக்ஸ், கமெண்ட் கொடுத்துள்ளனர்.
பின்னர், நாட்கள் செல்ல செல்ல இருவரும் தங்களுடைய செல்போன் எண்களை பரிமாறி நேரம் செல்வதே தெரியாமல் உரையாடி காதலித்து வந்தனர். இந்நிலையில், கல்லூரி மாணவியை பார்க்க பெருந்துறைக்கு வந்த முகமது ஹர்சத் பெந்துறையில் ஒரு விடுதியில் தங்கியுள்ளார். அங்கு மாணவியும் சென்ற நிலையில் தனிமையில் இருந்தனர். இதனால், மாணவி 3 மாதம் கர்ப்பமடைந்தார்.
இந்த விஷயம் மாணவியின் வீட்டிற்கு தெரிந்தது. அதைக்கேட்டு அதிர்ந்து போன மாணவியின் பெற்றோர் உடனே புதுக்கோட்டைக்கு சென்று முகமது ஹர்ஷத்தையும், அவருடைய பெற்றோரையும் சந்தித்து முறையிட்டுள்ளனர். பிறகு இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இதனையடுத்து, பத்திரிக்கையும் அச்சிடப்பட்டு ஜூலை முதல் வாரத்தில் திருமணம் நடப்பதாக இருந்த நிலையில், பெற்றோருடன் முகமது ஹர்சத் தலைமறைவானார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் பெருந்துறை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.
அதன்பேரில், முகமது ஹர்சத், அவருடைய தந்தை வக்கீம் சல்மான், தாய் பீவிஜான், சித்தப்பா கபூர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.