ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நட்சத்திர கல்லூரி திட்டம் அறிமுகம்

ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான நட்சத்திரக் கல்லூரி திட்டம் பற்றி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2024-09-27 12:30 GMT

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நட்சத்திரக் கல்லூரி திட்டம் பற்றிய அறிமுக நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.

ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான நட்சத்திரக் கல்லூரி திட்டம் பற்றி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அறிவியல் துறைகள் சார்பாக முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான நட்சத்திரக் கல்லூரி திட்டம் பற்றி அறிமுக நிகழ்ச்சியை உயிர் வேதியியல், உயிரித் தொழில்நுட்பம், கணிதம், கணினி அறிவியல் மற்றும் இயற்பியல் துறைகள் ஏற்பாடு செய்தனர்.


இதில், கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையின் இணைப் பேராசிரியர் முன்னாள் முதல்வர் மற்றும் வழிகாட்டி நட்சத்திரக் கல்லூரித் திட்டம் முனைவர் ஆர்.ராஜேந்திரன் கலந்து கொண்டு நட்சத்திரக் கல்லூரி திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி மற்றும் அதை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மாணவர்களுக்கு உரையாற்றினார்.


நிகழ்ச்சிக்கு, கல்லூரி தாளாளர் பி.டி.தங்கவேல் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் எச்.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.வித்யா வரவேற்புரை வழங்கினார். இறுதியில் கணினி அறிவியல் துறைத் தலைவர் பி.ரமேஷ் நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News