ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 91.11 சதவீதம் பேர் தேர்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 91.11 சதவீதம் பேர் தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு முடிவுகளும் இன்று வெளியிடப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் 24 ஆயிரத்து 747 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதில் 22 ஆயிரத்து 548 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்கள் 10 ஆயிரத்து 913 பேரும், மாணவிகள் 11 ஆயிரத்து 635 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு எழுதிய மாணவர்களில் 87.28 சதவீதம் பேரும், மாணவிகளில் 95.03 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த சராசரியாக 91.11 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.