தவெக மாநாடு வெற்றி பெற வேண்டி கோபி கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வெற்றியடைய வேண்டும் என்று ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.;

Update: 2024-10-26 06:30 GMT

கோபியில் தவெக மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டி பொதுமக்களுக்கு அழைப்பிதழ்களுடன் மரக்கன்றுகளை வழங்கிய தவெகவினர்.

Erode Today News, Erode Live Updates, Erode News- தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வெற்றியடைய வேண்டும் என்று ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திரைப்பட நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை (அக்.27ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் நடக்க இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த மாநில மாநாடு வெற்றியடைய வேண்டி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள தான்தோன்றியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையம் நகர செயலாளர் ஜம்பு கார்த்தி மற்றும் பொருளாளர் பிரசண்ணா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஆனந்தகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாநாடு வெற்றியடைய வேண்டி சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர், அங்கிருந்த பொதுமக்களுக்கு மாநாட்டு அழைப்பிதழ்களுடன் மரக்கன்றுகளை வழங்கி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர். இந்நிகழ்ச்சியில் கோபி சட்டமன்ற தொகுதியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News