ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 30ம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு..!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் ஜூன் 30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.

Update: 2024-06-27 11:06 GMT

கிராம சபைக் கூட்டம் (மாதிரிப் படம்).

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் ஜூன் 30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம், ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பழுதடைந்த ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டம் 2024-25 (ஓடுகள் மற்றும் சாய்ந்த ஆர்சிசி மேற்கூரை வீடுகளுக்கு சிறிய மற்றும் பெரிய பழுதுகளை சரிசெய்தல்) மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் 2024-25 செயல்படுத்திட கிராம அளவிலான குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

அனைத்து கிராம ஊராட்சிகளும் கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்தக் கூட்டத்தில் அந்தந்த கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News