வார இறுதி விடுமுறை: ஈரோட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Erode news- வார இறுதி நாட்களை முன்னிட்டு ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.;

Update: 2024-03-14 10:45 GMT

Erode news- ஈரோடு பேருந்து நிலையம்.

Erode news, Erode news today- வார இறுதி நாட்களை முன்னிட்டு ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசின் மாநில பேருந்து போக்குவரத்து சேவை என்பது பொதுமக்களின் தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாததாக உள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், அவ்வப்போது பண்டிகை காலம், சிறப்பு விடுப்புகள் போன்ற காலங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

குறிப்பாக பொங்கல், தீபாவளி, கோடை விடுமுறை, ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய விழாக்களின் போது, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக அரசு தரப்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

அந்த வகையில் தற்போது வார இறுதி விடுமுறையை கருத்தில் கொண்டு, இந்த வாரத்தில் மாநிலத்தில் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் சொர்ணலதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகளின் வசதிக்காக ஈரோட்டில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர், இராமேஸ்வரம், திருவண்ணாமலை, பழனி போன்ற ஊர்களுக்கு தற்போது இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News