அந்தியூர் அருகே மாநில எல்லை சோதனைச் சாவடியில் எஸ்பி ஆய்வு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-25 11:00 GMT

தட்டக்கரை வன அலுவலகம் முன்பு தேர்தல் பறக்கும் படையினரின் செயல்பாடு குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆய்வு மேற்கொண்டார்.

 அந்தியூர் அருகே மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ காண்காணிப்பு குழுக்கள் கலைக்கப்பட்டன. ஆனால், கர்நாடக மாநிலத்தில் முதல் கட்டமாக நாளை ஏப்ரல் 26ம் தேதி மற்றும் இரண்டாம் கட்டமாக மே 6 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால், வாக்காளர்களுக்கு ரொக்கப் பணம், நகைகள், பரிசுப் பொருட்களை அரசியல் கட்சியினர் விநியோகிப்பதை தடுக்க அந்த மாநில எல்லையை ஒட்டியுள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மற்றும் அந்தியூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட  மட்டும் நிலை கண்காணிப்புக் குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அந்தியூர் தொகுதிக்கு உள்பட்ட தட்டக்கரை வன அலுவலகம் முன்பு தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவின் செயல்பாடு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News