ஈரோட்டில் தென்னக ரயில்வே ஓய்வூதியர் நலச்சங்க 9வது பொது மகா சபைக் கூட்டம்
தென்னக ரயில்வே ஓய்வூதியர் நல சங்கத்தின் 9வது பொது மகா சபைக் கூட்டம் ஈரோடு ரயில்வே காலனியில் உள்ள பழைய ரயில்வே மண்டபத்தில் நடந்தது.
தென்னக ரயில்வே ஓய்வூதியர் நல சங்கத்தின் 9வது பொது மகா சபைக் கூட்டம் ஈரோடு ரயில்வே காலனியில் உள்ள பழைய ரயில்வே மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் எம்.உதயகுமார் தலைமை தாங்கினார்.
பொதுச் செயலாளர் வி.வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தார். செயல் பொதுச்செயலாளர் எம்.தேவராஜ் அறிக்கை படித்தார். ஸ்டேட் வங்கி உதவி பொது மேலாளர் சு.இளங்கோ, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் வ.பன்னீர் செல்வம் ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில், எட்டாவது சம்பளக் கமிசன் பற்றி உடனடியாக அறிவிக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை நிறுத்தி ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தினை மத்திய அரசு 01.04.2025 முதல் அமுல்படுத்தப்பட உள்ளது. அதனை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
நிலுவையில் உள்ள 18 மாத டிஆர் அரியர்ஸை பென்சனர்களுக்கு உடனே வழங்க வேண்டும். அடிசனல் ஏஜ்டு பென்சன் 65 வயதிலிருந்து கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். எப்எம்ஏ ரூபாய் 1,000லிருந்து ரூ.3,000 கொடுக்க வேண்டும். கம்யூடேசன் பிடித்தத்தை 15 ஆண்டுகளிலிருந்து 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்.
பென்சனுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். எர்ணாகுளம் நீதிமன்றத்தில் இருக்கும் ஓடும் தொழிலாளர்களின் வழக்குகளின் நிலவரம் குறித்து வெளியிட வேண்டும். கூடுதல் கருணை பென்சன் வாங்குபவர்களின் விதவை, விவாகரத்து பெற்ற மகள்களுக்கும் பென்சன் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு போல் பென்சனர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு இறப்பு, ஈமச்சடங்கு நிதி வழங்க வேண்டும். ரயில்வே மருத்துவமனையில் பென்சனர்களுக்கு தனியாக ஒரு மருத்துவரை நியமிக்க வேண்டும். உரிய காலத்தில் மெடிக்கல் க்ளைம்ஸ்ஐ வழங்க வேண்டும்.
குடும்ப பென்சன் ஐ 30% லிருந்து 40% ஆக உயர்த்த வேண்டும். எம்ஏசிபிஐ 01.09.2008க்கு பதிவாகி 01.01.2006 முதல் அமல்படுத்த வேண்டும். தற்பொழுது சேலம் இரயில்வே கோட்டத்தில் Medical Reimbursement விண்ணப்பங்கள், இரயில்வே அங்கீகரிக்கப்பட்ட (Referral) மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லையென்று திருப்பி அனுப்பப்படுகின்றது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறாவிட்டாலும் CGHS Rate ஐ கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நடைபெற்ற கூட்டத்தில் ரயில்வே ஓய்வூதியர்கள் சுமார் 800 பேர் கலந்து கொண்டனர்.