டிச.23ல் ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு..!

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் டிசம்பர் 23ம் தேதி அதிகாலை திறக்கப்படுகிறது.

Update: 2023-12-12 12:45 GMT

சொர்க்கவாசல் திறப்பு (கோப்பு படம்).

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் டிசம்பர் 23ம் தேதி அதிகாலை திறக்கப்படுகிறது.

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 22ம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது. அப்போது பெருமாளுக்கு மோகினி அலங்காரம் செய்யப்படுகிறது. 23ம் தேதி அதிகாலை 3 மணிக்கு கஸ்தூரி அரங்கநாதரின் உற்சவ சிலைக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதில், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாளுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அதிகாலை 5 மணிக்கு கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பசு மாடுகள் அழைத்துச் செல்லப்படும். பின்னர், சப்பரத்தில் எழுந்தருளிய பெருமாள் பரம்பத் வாசல் வழியாகக் கொண்டு செல்லப்படுவார். இதில், பக்தர்கள் திரளாகப் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். விழாவையொட்டி, கோவிலில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சொர்க்கவாசல் வரலாறு

உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் படைக்கும் பிரம்மாவின் படைப்பு காலம் முடிவடைந்தது. எல்லா உயிர்களும் இறைவனிடத்தில் ஒதுங்கிவிடும் காலமாக ஊழி காலம் இருந்தது. அப்படி ஊழி காலம் தொடங்கப்பட்ட பின் மகாவிஷ்ணுவின் வயிற்றில் இருந்த தொப்புளில் இருக்கும் தாமரையில் பிரம்மன் அடங்கினார்.

பிரம்மனின் அடுத்த கட்ட பகல் தொடங்கியதும் தாமரை இலை தண்ணீர் பிரம்மன் மேல் தெளிக்கப்பட்டது. அதிலிருந்து சில துளிகள் பிரம்மனின் காதுகளில் சென்றன. பின்னர் விழித்துக் கொண்ட பிரம்மன் முதல் வேலையாக தனது பிராணவாயுவை தூண்டினார்.

அப்போது அவரது இரு காதுகளில் இருந்தும் அசுத்தமான நீர் வெளியேறியது. அதில் ஒன்றும் மிருதுவாகவும் ஒன்று கடினமாகவும் இருந்தது. வெளியேறிய இரண்டு நீர் துளிகளும் மது மற்றும் கைடபர் என்று அசுரர்களாக உருவெடுத்தன.

இருவரும் ஒளி வடிவில் பிரம்மாவிடம் இருந்த வேதங்களை திருடிச் சென்றனர். பின்னர் ஹயக்ரீவர் அவதாரம் எடுத்த பெருமாள் அந்த வேதங்களில் திரும்ப கொண்டு வந்தார். அவர்கள் இருவரும் அனைவரையும் துன்பப்படுத்திக் கொண்டிருந்தனர். பெருமாள் அவர்களுடன் போரிட்ட போது இருவரும் பெருமாளிடம் சரணடைந்தனர்.

நாங்கள் இருவரும் எப்போதும் உங்களிடம் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பெருமாளும் அப்படியே வரத்தை அருளினார். அதேசமயம் வைகுண்ட ஏகாதேசி திருநாளில் திருவரங்கத்தின் வடக்கு வாசல் வழியாக தாங்கள் வெளியே வரும் பொழுது உங்களை தரிசிப்பவர்களுக்கு செய்த அனைத்து பாவத்தையும் நீக்கி முக்கி அளிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் உருவானது. மது மற்றும் கைடபர் ஆகியோரை பெருமாள் அடக்கியதால் அவருக்கு மதுசூதனன் என்ற பெயர் வந்தது.

Tags:    

Similar News