கோபிசெட்டிபாளையம் அருகே மாமியாரை கோயில் வேலால் குத்திய மருமகன் கைது

Erode News- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மாமியாரை கோயில் வேலால் குத்திய மருமகன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2024-09-01 11:15 GMT

Erode News- கைது செய்யப்பட்ட கார்த்தி.

Erode News, Erode News Today - கோபிசெட்டிபாளையம் அருகே மாமியாரை கோயில் வேலால் குத்திய மருமகன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் தோப்பூரை பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (வயது 40). இவருடன் இவரது தந்தை முத்தான் (வயது 60) என்பவரும் வசித்து வருகிறார். சத்யாவிற்கு நிவேதா (வயது 24) என்ற மகள் உள்ளார்.

நிவேதா கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சத்தியமங்கலம் அருகேயுள்ள கொண்டப்பநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சின்ன குட்டி என்பவரது மகன் கார்த்தியை (வயது 27) காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், கார்த்தி குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், நிவேதா, கணவர் கார்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது தாய் சத்யா வீட்டிற்கு வந்து இருந்து உள்ளார்.

கார்த்தி நிவேதாவை பலமுறை தன் வீட்டிற்கு வரும்படி அழைத்தும் வராததால், மாமியார் சத்யா தான் காரணம் என்று மாமியார் மீது கோபத்தில் இருந்த கார்த்தி, கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு 1.00 மணியளவில் சத்யா அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது, கார்த்தி மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை தன்னுடன் கூட்டி செல்ல அழைத்துள்ளார்‌.

அப்போது, மாமியாருக்கும் மருமகன் கார்த்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டு, ஆத்திரம் அடைந்த கார்த்தி அருகில் கோயிலில் இருந்த வேல் ஒன்றை எடுத்து மாமியார் சத்யாவின் கழுத்து மார்பு மற்றும் கால் பகுதிகளில் வேலால் குத்தியுள்ளார். இதில் வழி தாங்க முடியாமல் சத்யா சத்தம் போடவே, அருகில் இருந்த சத்யாவின் தந்தை முத்தான் தடுக்க சென்றபோது, அவரையும் இடது தோள்பட்டையில் வேலால் குத்தி விட்டு தப்பியோடி தலைமறைவானார்.

சத்யா மற்றும் அவரது தந்தை முத்தான் இருவரும் காயம்பட்ட நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கார்த்தியை தேடி வந்தனர், இந்த நிலையில், நேற்று இரவு கார்த்தியை கைது செய்த பங்களாப்புதூர் போலீசார் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News