ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.5.37 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

Erode news- ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.5 கோடியே 37 லட்சத்து 67 ஆயிரத்து 469 ரூபாய் பணம் மற்றும் பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.;

Update: 2024-04-15 04:45 GMT

Erode news- பவானி அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.33 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து பவானி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நேற்று ஒப்படைத்தனர்.

Erode news, Erode news today-ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.5 கோடியே 37 லட்சத்து 67 ஆயிரத்து 469 ரூபாய் பணம் மற்றும் பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தோ்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு மாா்ச் 16ம் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல் தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனை கண்காணிக்கும் வகையில் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கம், மதுபானங்கள், பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து வருகின்றனா்.

அதன்படி, மாவட்டத்தில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் இன்று (ஏப்ரல் 15ம் தேதி) திங்கட்கிழமை காலை வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.90 லட்சத்து 26 ஆயிரத்து 707ம், ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.94 லட்சத்து 19 ஆயிரத்து 890ம், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.9 லட்சத்து 21 ஆயிரத்து 370ம், பெருந்துறை தொகுதியில் ரூ.40 லட்சத்து 15 ஆயிரத்து 420ம், பவானி தொகுதியில் ரூ.29 லட்சத்து 50 ஆயிரத்து 450ம், அந்தியூர் தொகுதியில் ரூ.11 லட்சத்து 6 ஆயிரத்து 200ம், கோபி தொகுதியில் ரூ.45 லட்சத்து 95 ஆயிரத்து 250ம், பவானிசாகர் தொகுதியில் ரூ.97 லட்சத்து 35 ஆயிரத்து 876ம் என 8 சட்டமன்ற தொகுதிகளில் 289 பேரிடம் ரொக்கப் பணமாக மொத்தம் ரூ.4 கோடியே 17 லட்சத்து 71 ஆயிரத்து 163 மற்றும் பொருட்களாக ரூ.1 கோடியே 19 லட்சத்து 96 ஆயிரத்து 306 மதிப்பில் பறிமுதல் செய்துள்ளனர்.

இதில், 235 பேர் ரொக்கப் பணம் ரூ.2 கோடியே 84 லட்சத்து 8 ஆயிரத்து 63 ரூபாய் உரிய ஆவணங்களை காண்பித்து பெற்று சென்றனர். மீதமுள்ள 54 பேரின் ரூ.1 கோடியே 33 லட்சத்து 63 ஆயிரத்து 100 ரூபாய் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர். முறையான ஆவணங்களை அளித்தால், பறிமுதல் செய்யப்பட்ட பணம் மீண்டும் வழங்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News