ஈரோடு: எஸ்.கே.எம். பூர்ணா நிறுவனத்தில் புதிதாக கோதுமை மாவு அறிமுகம்
Erode news- எஸ்.கே.எம். பூர்ணா நிறுவனத்தில் புதிதாக பூர்ணா கோதுமை மாவு (பூர்ணா சக்கி ஆட்டா) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.;
Erode news- பூர்ணா சக்கி ஆட்டாவை அறிமுகம் செய்த நிர்வாக இயக்குநர்கள்.
Erode news, Erode news today- எஸ்.கே.எம். பூர்ணா நிறுவனத்தில் புதிதாக பூர்ணா கோதுமை மாவு (பூர்ணா சக்கி ஆட்டா) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோட்டில் எஸ் கே எம் அனிமல் பீட்ஸ் அன்ட் ஃபுட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடந்த 42 ஆண்டுகளாக தென்னிந்தியாவில் கால்நடை மற்றும் கோழி தீவனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த 2006ம் ஆண்டு முதல் 'பூர்ணா' என்ற பெயரில் சமையல் எண்ணெய் வகைகளை தயாரித்து தென்னிந்தியாவில் விற்பனை செய்து வருவதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சந்திரசேகர், இயக்குனர் சியாமளா ஷர்மிலி மற்றும் செயல் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணா ஆகியோர் அண்மையில் பூர்ணா கோதுமை மாவை(பூர்ணா சக்கி ஆட்டா) சந்தையில் அறிமுகம் செய்துள்ளனர். இந்த பூர்ணா சக்கி ஆட்டாவானது, நமது பழைய பாரம்பரிய முறையான திருகல் முறையில் தயாரிக்கப்படுவதால் கோதுமையின் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்கும்.
இது சப்பாத்தி, பூரி மற்றும் தோசைக்கு நல்ல ருசியைக் கொடுக்கும். பூர்ணா சக்கி ஆட்டா 1/2 கிலோ, 1 கிலோ மற்றும் 5 கிலோ அளவுகளில் கிடைக்கிறது. இந்த தரமான பூர்ணா சக்கி ஆட்டாவிற்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். பூர்ணா வாங்குவோம் விவசாயம் காப்போம் என எஸ்கேஎம் பூர்ணா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.