கோபிச்செட்டிப்பாளையம் குட்டையில் முழ்கி முதியவர் பலி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே குட்டையில் முழ்கி முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-12-17 10:30 GMT

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள தீர்த்தம்பாளையத்தை  சேர்ந்தவர் ராக்கியண்ணன்,  கூலித்தொழிலாளி. இவர் கடந்த டிசம்பர் 14-ம் தேதி  மளிகை கடைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், கருதாம்பாடிபுதூர் என்ற இடத்தில் உள்ள குட்டையில் நேற்று ரக்கியண்ணன் இறந்து கிடந்தார். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News