தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பணிநியமன ஆணைகளை வழங்கிய செங்கோட்டையன்

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.;

Update: 2024-03-11 12:18 GMT

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ வழங்கினார்.

நம்பியூரில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ வழங்கினார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் கார்களுக்கான பாகங்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனத்தில் பணி புரிய தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான நேர்முக தேர்வு கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பட்டதாரி மாணவர்கள் கோபி, நம்பியூர், கெட்டி செவியூர், குருமந்தூர், கொளப்பலூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானிசாகர், பவானி, அந்தியூர், ஆப்பக்கூடல், பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவ மாணவிகள், இளைஞர்கள் நேர்முக தேர்வில் பங்கேற்றனர்.

இந்த வேலை வாய்ப்பு முகாமினை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தனியார் மண்டபத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் நேர்முக தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேர்முக தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு கே.ஏ.செங்கோட்டையன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கோபி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வக்கீல் மவுலீஸ்வரன், நம்பியூர் ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி, நம்பியூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுப்பிரமணியம், கோபி நகர செயலாளர் பிரிநீ யோனி கணேஷ், நம்பியூர் பேரூர் செயலாளர் கருப்பண கவுண்டர், எலத்தூர் பேரூர் செயலாளர் சேரன் சரவணன், கொளத்தூர் பேரூர் செயலாளர் தங்கராசு, நம்பியூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் திவாகர் மற்றும் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு அதிகாரிகள் கொண்டனர்.

Tags:    

Similar News