தாளவாடி பகுதியில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

தாளவாடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெட்டி கடையில் விற்றவர் கைது.;

Update: 2021-12-11 09:45 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாளவாடி போலீசார் தாளவாடி ஒசூர் ரோட்டில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள மாரிமுத்து என்பவர் பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் பெட்டி கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 27 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News