கோபி ஐடியல் நர்சரி பிரைமரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
Erode news- கோபி ஐடியல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவ மாணவிகள் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.;
Erode news, Erode news today- கோபி ஐடியல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவ மாணவிகள் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே அருகே செயல்பட்டு வரும் ஐடியல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சியானது பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சிக்கு, பள்ளியின் தாளாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். இக்கண்காட்சியில் கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் கோபால்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து, மாணவ, மாணவியர்களின் புதிய கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு அவர்களின் முயற்சியை பாராட்டி பரிசுகளை வழங்கினார். மேலும், கண்காட்சியில் மாணவ- மாணவியர்களின் அறிவுக் கூர்மையை வெளிப்படுத்தும் வண்ணம் பல்வேறு அறிவியல் மாதிரிகள், செய்முறை விளக்கங்கள் இடம் பெற்றிருந்தன. இந்நிகழ்ச்சியில், மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உஷாராணி, கலைச்செல்வி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.