சத்தியமங்கலத்தில் பட்டா ரத்து செய்யப்பட்ட இடத்தில் வீடு கட்ட முயன்றதால் பரபரப்பு

சத்தியமங்கலம் அருகே பட்டா ரத்து செய்யப்பட்ட இடத்தில் குடிசை அமைக்க முயன்ற விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2021-12-14 08:30 GMT

பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சத்தியமங்கலம் போலீசார் மற்றும் தாசில்தார் ரவிசங்கர்.

சத்தியமங்கலம் அருகே புளியங்கோம்பை செல்லும் வழியில் உள்ள ஆண்டவர் நகரில் 23 ஆண்டுகளுக்கு முன்பு,  251 நபர்களுக்கு வருவாய் துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டது. அப்பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசிக்கின்றனர். கடந்த 2020 பிப்ரவரி மாதம் கலெக்டர் பரிந்துரைப்படி, வீடு கட்டாதவர்களின் பட்டாவை ரத்து செய்து, வேறு நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று, 50க்கும் மேற்பட்டோர் காலியிடத்தில் குடிசை அமைக்க சென்றனர்.

அவர்களை ஏற்கனவே பட்டா பெற்று ரத்து செய்யப்பட்டவர்கள் தடுத்தனர். அதில் ஒருவர் தீக்குளிப்பதாக வருவாய் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து சத்தியமங்கலம் போலீசார், தாசில்தார் ரவிசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டர் உத்தரவை நான் ரத்து செய்யமுடியாது. உரிய முறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறவே, எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News