ஈரோட்டில் 3 கல்லூரிகளில் "சட்டமன்ற நாயகர் கலைஞர்” கருத்தரங்கம்
சட்டமன்ற நாயகர் கலைஞர் எனும் தலைப்பில் ஈரோட்டில் 3 கல்லூரிகளில் கருத்தரங்கம் வியாழக்கிழமை (நேற்று) நடைபெற்றது.
சட்டமன்ற நாயகர் கலைஞர் எனும் தலைப்பில் ஈரோட்டில் 3 கல்லூரிகளில் கருத்தரங்கம் வியாழக்கிழமை (நேற்று) நடைபெற்றது.
டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 'சட்டமன்ற நாயகர் கலைஞர்" எனும் தலைப்பில் ஈரோட்டில் கருத்தரங்கம் நடை பெற்றது. ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி, ஈரோடு ரங்கம்பாளையம் கலை அறிவியல் கல்லூரி, வீரப்பன்சத்திரம் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் நடை பெற்ற இக்கருத்தரங்கிற்கு அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் நாகரத்தினம், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கருத்தரங்கில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கோவி.செழியன் பேசியதாவது, தந்தை பெரியாரின் மாணவராய், அண்ணாவின் தம்பியாய், வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்து தன் வாழ்நாளை அர்ப்பணித்து உயர்ந்த தலைவர் கலைஞர் ஆவார். அவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவையால் அமைக்கப்பட்டு, 12 குழுக்களில் ஒரு குழுவான 'சட்டமன்ற நாயகர் கலைஞர்"என்ற விழாக்குழுவின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் மாவட்ட அளவில் 3 கல்லூரிகள், 3 பள்ளிகளும் மற்றும் மாநில அளவில் 100 கல்லூரிகள், 100 பள்ளிகள் என தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவில் இறுதிப்போட்டி கள் நடத்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் ரங்கம்பாளையம் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி மற்றும் வீரப்பன்சத்திரம் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இக்கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை கலைஞர் சிறப்புடன் செயல்படுத்தி உள்ளார். அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய சிறப்பு மிக்க உரைகளை இங்கு பேசிய மாணவியர்கள் அனைவரையும் நான் மனதார பாராட்டுகிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார். தமிழ்நாடு சட்டமன்ற கூடுதல் செயலர் ரவிச்சந்திரன், இணைச் செயலாளர் ஸ்ரீவித்யா, துணைச்செயலாளர்கள் ராஜேந்திரன். கணேசன், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வி.ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் மற்றும் மண் டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.