சத்தி பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.400-க்கு விற்பனை
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று நடைபெற்ற ஏலத்தில் கனகாம்பரம் கிலோ ரூ.400-க்கு விற்பனையானது
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புளியம்பட்டி, பவானிசாகர், பண்ணாரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களை பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர்.
அங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே கரட்டூர் ரோட்டில் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் தினசரி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும்.
அதன்படி இன்று (ஏப்.,25) செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-
மல்லிகைப்பூ - ரூ.350 ,
முல்லைப்பூ - ரூ.160 ,
காக்கடா - ரூ.350 ,
செண்டுமல்லி - ரூ.26 ,
கோழிக்கொண்டை - ரூ.54 ,
கனகாம்பரம் - ரூ.400 ,
சம்பங்கி - ரூ.20 ,
அரளி - ரூ.150 ,
துளசி - ரூ.40 ,
செவ்வந்தி - ரூ.200-க்கும் விற்பனையானது.