நேட்டிவ் நியூஸ் தமிழ் செய்தி எதிரொலி: சுத்தமான சத்தி பேருந்து நிலைய கழிப்பறை
சத்தியமங்கலம் பேருந்து நிலைய கழிப்பறை சுகாதார சீர்கேடு தொடர்பாக நேட்டிவ் நியூஸ் தமிழில் செய்தி வெளியானதன் எதிரொலியாக சுத்தம் செய்யப்பட்டது.
சத்தியமங்கலம் பேருந்து நிலைய கழிப்பறை சுகாதார சீர்கேடு தொடர்பாக நேட்டிவ் நியூஸ் இணைய தளத்தில் செய்தி வெளியானதன் எதிரொலியாக சுத்தம் செய்யப்பட்டது. பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்தில் பல மாதங்களாக குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. ஆண், பெண் பயணிகளுக்கான இலவச கழிப்பறைகள் சிதிலமடைந்தும் இருந்தது.
மேலும், கழிப்பறையில் சேகரமாகும் கழிவு நீர் வெளியேறவும் வழியின்றி குளம் போல தேங்கி ஆங்காங்கே கொசுக்களை உற்பத்தி செய்து பெரும் சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வந்தது. இதனால், அந்தக் கழிப்பறையை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து நேட்டிவ் நியூஸ் தமிழ் செய்தி தளத்தில் நேற்று (24ம் தேதி) படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சத்தியமங்கலம் நகராட்சி நிர்வாகத்தினர் பணியாளர்கள் மூலம் இன்று (25ம் தேதி) பேருந்து நிலைய கழிப்பறையை சுத்தம் செய்து, பிளிச்சிங் பவுடரை தூற்றினர். தொடர்ந்து, டேங்கர் லாரிகள் மூலம் கழிப்பறை கழிவுகளை அகற்றினர்.
மேலும், செய்தி வெளியிட்ட நேட்டிவ் நியூஸ் தமிழ் செய்தி தளத்திற்கும், நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.