ஈரோடு நசியனூர் பகுதியில் பல வடிவ விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரம்
ஈரோடு நசியனூர் பகுதியில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமடைந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி தினம் நெருங்குவதை தொடர்ந்து, ஈரோடு நசியனூர் பகுதியில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமடைந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவையொட்டி, ஈரோடு நசியனூர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் சிற்ப கலைக்கூடத்தில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமடைந்துள்ளது.
இதுகுறித்து ஸ்ரீ சித்தி விநாயகர் சிற்பக் கலைக்கூடத்தின் உரிமையாளர் என்.சி.வெங்கடாசலம் கூறுகையில், கடந்த மூன்று மாதங்களாக விநாயகர் சதுர்த்திக்காக பல்வேறு வடிவங்களில் இங்கே பத்து தொழிலாளர்களை சொந்தமாக அரை அடி முதல் 10 அடி உயரத்தில் பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமடைந்துள்ளது.
விலை ரூ.100 ரூபாய் முதல் ரூ.20 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் இச்சிலைகள் ரசாயன கலப்படங்கள் இன்றி எளிதில் நீரில் கலையும் வண்ணம் களிமண் மற்றும் அட்டை மாவு மூலம் தயாரிக்கப்படுகிறது. இதனால் நீர்நிலைகள் மாசடைய வண்ணம் பாதுகாக்கப்படும் .
பட்சி மேல் அமர்ந்த விநாயகர், முருகனுடன் உள்ள விநாயகர் சிவபெருமான், பார்வதியுடன் உள்ள விநாயகர் என பல்வேறு வண்ணங்களிலும் பல வாகனங்கள் மீதும் விநாயகர் அமர்ந்துள்ள சிலைகள் உள்ளன. தற்போதே சிலைகளை பலர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர் என்றார்.